மாறுபட்ட வேடத்தில் ஃபகத் ஃபாசில்... ஆவேஷம் படத்திற்கு வரவேற்பு...

மாறுபட்ட வேடத்தில் ஃபகத் ஃபாசில்... ஆவேஷம் படத்திற்கு வரவேற்பு...

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில்.. சிறந்த கலைஞர் எனப் போற்றப்படும் ஃபகத், 2002-ம் ஆண்டு தனது அப்பா ஃபாசில் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து, தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். வித்தியாசமான, எளிமையான கதைகள் பலவற்றில் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், ஃபகத் பாசில் படமென்றாலே ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் அவர், பெங்களூர் டேஸ் படத்திற்கு பிறகு தமிழிலும் அதிக ரசிகர்களைக் கவர்ந்து விட்டார். தமிழில் அவரது நடிப்பில் வெளியான விக்ரம் மற்றும் மாமன்னன் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. 

மாறுபட்ட வேடத்தில் ஃபகத் ஃபாசில்... ஆவேஷம் படத்திற்கு வரவேற்பு...

தெலுங்கில் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஆவேஷம் படத்தின் முதல் தோற்றம் வௌியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story