பேமிலி ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பேமிலி ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. பேமிலி ஸ்டார் படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் பரசுராம் கலந்துக்கொண்டனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பேமிலி ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி படம் வௌியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story