பேமிலி ஸ்டார் படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு
தெலுங்கில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. பேமிலி ஸ்டார் படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
nullGear up for the musical adventure that #FamilyStar is here to take you on ❤️🔥#Nandanandanaa Promo out now 💥
— Mrunal Thakur (@mrunal0801) February 5, 2024
Full Song will sweep you off your feet on Feb 7th ❤️https://t.co/FM6n3SHGR6 pic.twitter.com/L9ikkth2KT
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல், நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.