“ஸ்டார் அந்தஸ்தை இழந்துவிட்டார் சமந்தா… கேரியர் முடிந்துவிட்டது……” – கடுமையாக விமர்சித்த தயாரிப்பாளர்.

photo

‘சகுந்தலம்’ படத்தின் தோல்வியால் நடிகை சமந்தா தனது ஸ்டார் அந்தஸ்தை இழந்துவிட்டதாக தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.  

photo

 சமந்தா விவாகரத்திற்கு பிறகு சினிமா மீது அதீத ஆர்வம் காட்டி பல சவாலான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து  வந்தார். இந்த நிலையில் குணசேகர் இயக்கத்தில் புராண இதிகாசமான சகுந்தலையில் வாழ்கையை மையமாக வைத்து தயாரான ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறவில்லை. வசூலிலும் அடிவாங்கிவருகிறது. இந்த நிலையில் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான சிட்டி பாபு சமந்தா குறித்து விமர்சித்துள்ளார்.

photo

அவர் கூறியதாவது” விவாகரத்திற்கு பின்னர் தனது வாழ்வாதாரத்திற்காக  புஷ்பா படத்தில் ஐட்ட பாடலுக்கு நடனமாடினார் சமந்தா, யசோதா படம் வெளியான சமயத்தில் புரொமோஷனில் கலந்துகொண்டு கண்ணீர் விட்டார், அதே  யுத்தியை சாகுந்தலம் படத்திற்கும் செய்தார் ஆனால் கைகொடுக்கவில்லை. எல்லா நேரமும் சென்டிமென்ட் கை கொடுக்காது. சமந்தா ஸ்டார் ஹீரோயின்  அந்தஸ்தை இழந்துவிட்டார். கதாநாயகியாக அவரது கேரியர் முடிந்துவிட்டது. இனி எந்த மலிவான செயலும் எடுபடாது, கதையும், கதாப்பாத்திரமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள் “ என மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

Share this story