நெஞ்சில் பச்சை குத்திய ரசிகர்.. அசந்துபோன சாய் பல்லவி !
தனது ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்தியுள்ளதை பார்த்து நடிகை சாய் பல்லவி அசந்து போய்விட்டார்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் பிரபலமான இவர், தற்போது தெலுங்கில் செம்ம பிசியான நடிகையாக மாறிவிட்டார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது வேணு உடுகுலா இயக்கத்தில் ‘விராட பருவம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் பல்லவியுடன் இணைந்து நடிகர் ராணா டகுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நக்சலைட் கதைக்களம் கொண்ட இப்படம் இன்று வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இதையொட்டி நேற்று ‘விராட பருவம்’ வெளியாகும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வந்தார். அப்போது ஒரு திரையரங்கில் ரசிகர் ஒருவர் சாய் பல்லவியின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். இதை பார்த்த சாய் பல்லவி நெகிழ்ச்சியில் உருகிவிட்டார். இதையடுத்து அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

