யாத்ரா 2 திரையிடலின்போது அடித்துக் கொண்ட ரசிகர்கள்

யாத்ரா 2 திரையிடலின்போது அடித்துக் கொண்ட ரசிகர்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஒய். எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’ இந்த படத்தில் ஒய்.எஸ். ஆர் கதாப்பாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருப்பார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதையும் முதல் பாகத்தை இயக்கிய மஹி வி ராகவ் இயக்கிவருகிறார். இந்த படத்தில் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாப்பாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 


இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள பிரசாத் திரையரங்கிலும் யாத்ரா 2 திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, படம் பார்த்துக் கொண்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்களும், பவன் கல்யாணின் ஆதரவாளர்களும் தாக்கிக்கொண்டனர். 
 

Share this story