பாடல் காட்சிகளுக்காக கோடிகளை கொட்டும் ஷங்கர்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர் !

game changer

‘கேம் சேஞ்சர்’ படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க இயக்குனர் ஷங்கர் 90 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது கமலின் ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கில் ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு மாபெரும் படங்களை இயக்கி வருகிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

game changer

 இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ பான் இந்தியா திரைப்படமாக தயாராகிறது. 
இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

அரசியல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்திற்காக பாடல்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களை எப்போதும் பிரம்மாண்டமாக படமாக்கும் ஷங்கர் இந்த படத்திலும் அதே பாணியில் பாடல்களை படமாக்கியுள்ளார். மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த பாடலுக்காக மட்டும் சுமார் 90 கோடியை செலவிட்டுள்ளாராம். இதனால் முதலில் அதிர்ச்சியான தயாரிப்பாளர் தில் ராஜூவை, பின்னர் ஷங்கர் சமாதானப்படுத்தி விட்டாராம். 

Share this story