கோடை விடுமுறைக்கு வெளியாகும் காந்தாரா 2

கோடை விடுமுறைக்கு வெளியாகும் காந்தாரா 2 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கிட்டதட்ட 16கோடி பட்ஜெட்டில் தயாரான காந்தாரா சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து படத்தின் அடுத்த பாகம் தயாராகும் என படநிறுவனம் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.

கோடை விடுமுறைக்கு வெளியாகும் காந்தாரா 2 

படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் காண்போரை மிரள வைக்கும் விதமாக உள்ளது. நீண்ட தாடி, முடி கையில் ஆயுதம் என பிரம்மிக்க வைக்கும் விதமாக உள்ளார் ரிஷப் ஷெட்டி. இந்நிலையில், படத்தை அடுத்த கோடை விடுமுறையின்போது வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.  
 

Share this story