அம்பானி வீட்டில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி....தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் படையெடுப்பு

அம்பானி வீட்டில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி....தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் படையெடுப்பு

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்பானி வீட்டில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி....தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் படையெடுப்பு

நாடு முழுவதும் கடந்த 2 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டனர். அந்த வகையில், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோரின் ஆன்ட்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அம்பானி வீட்டில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி....தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் படையெடுப்பு

வழக்கமாக அம்பானி வீட்டு விழாக்களில் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழ் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நயன்தாரா -  விக்னேஷ் சிவன் தம்பதி, அட்லீ - பிரியா தம்பதி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Share this story