பவன் கல்யாணுக்கு அம்மாவாக நடிக்கும் கௌதமி

பவன் கல்யாணுக்கு அம்மாவாக நடிக்கும் கௌதமி

தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் திரைப்படத்தில், அம்மா கதாபாத்திரத்தில் கௌதமி நடிக்கிறார். 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் வெளியான புரோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக உஸ்தாத் பகத் சிங் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் உஸ்தாத் பகத் சிங். இப்படத்தை ஹரிஸ் ஷங்கர் இயக்கி வருகிறார். ஸ்ரீ லீலா நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் பவன் கல்யாணுக்கு அம்மாவாக, அதாவது ராதிகா கதாபாத்திரத்தில் கௌதமி நடிப்பதாக கூறப்படுகிறது. 
 

Share this story