‘ஹாய் நான்னா’ பட ஓடிடி ரிலீஸ் அப்டேட்!....

photo

‘ஹாய் நான்னா’ திரைப்படம் இம்மாதம் 7ஆம் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், படத்தின் ஓடிடி ரிலீச் எப்போது என்ற தகவல்  வெளியாகியுள்ளது.

photo

வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சவுர்யா இயக்கத்தில் தயாரான படம் ‘ஹாய் நான்னா’. இந்த  படத்தில் தெலுங்கு சினிமாவின்  முன்னணி நடிகரான நானி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து மிருணாள் தாகூர் நடித்துள்ளார். இவர் சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தந்தை மகன் பாசத்தை மைய்யமாக வைத்து தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்த நிலையில் தற்போதைய தகவலாக படம் வரும் ஜனவரி 4ஆம் தேதி நட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

Share this story