ஹாய் நான்னா படத்தின் முன்னோட்டம் நவம்பர் 24 ரிலீஸ்

ஹாய் நான்னா படத்தின் முன்னோட்டம் நவம்பர் 24 ரிலீஸ்

வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சவுர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஹாய் நான்னா’. தந்தை மகன் பாசத்தை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படம் நானியின் 30வது படமாக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இதற்கு முன்னர் நானி நடித்த ஜெர்ஸி, கேங்கு லீடர், சியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, தசரா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

ஹாய் நான்னா படத்தின் முன்னோட்டம் நவம்பர் 24 ரிலீஸ்

இந்நிலையில், ஹாய் நான்னா படத்தின் ட்ரைலர் நாளை மறுநாள் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story