ஹாலிவுட் படத்தின் காப்பியா ‘பிராஜெக்ட் கே’ ஃப்ர்ஸ்ட் லுக்.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !

project k

பிரபாஸின் ‘பிராஜெக்ட் கே’ படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய மூன்று படங்களும் போதிய வெற்றியை பெறவில்லை. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதனால் பிரபாஸ் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் ‘சலார்’, ‘பிராஜெக்ட் கே’ ஆகிய படங்களின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. 

project k

அந்த வகையில் பக்கா சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகி ‘பிராஜெக்ட் கே’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை ‘மகாநிதி’ படத்தின் மூலம் தேசிய விருதுபெற்ற நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து உலக நாயகன் கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

ஹாலிவுட் படத்தின் காப்பியா ‘பிராஜெக்ட் கே’ ஃப்ர்ஸ்ட் லுக்.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !

 இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.  சுமார் 600 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகிறது. எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும் நிர்ணயிக்கும் படமாக இப்படம் உருவாகிறது. சர்வதேச அளவில் உருவாகும் இப்படம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 21-ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடப்படவுள்ளது. இதையொட்டி பிரபாஸ், கமலஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு குவிந்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு காரணம் அவெஞ்சர்ஸ் போஸ்டர் போன்றே இந்த போஸ்டரும் உள்ளது என்று கூறி ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் படக்குழுவினர் அப்செட்டாகி உள்ளனர். 

 

 

 

Share this story