வருடத்திற்கு ஒரு பிரம்மாண்ட திரைப்படம் - கேஜிஎப் தயாரிப்பாளரின் புதிய திட்டம் !

hombale films

 வருடத்திற்கு ஒரு பெரிய படம் தரவேண்டும் என்பது தான் திட்டம் என தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார். 

கன்னட திரையரங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான இருப்பது Hombale பிரொக்ஷ்ன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருப்பவர் விஜய் கிரகந்தூர். கடந்த ஆண்டு உலகத்தை திரும்பி பார்க்க வைத்த படங்களை இவர்தான் தயாரித்திருந்தார். 

முதன்முதலில் கேஜிஎப் படத்தை தயாரித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு அதன் இரண்டாம் பாகமும், பின்னர் சமீபத்தில் வெளியான காந்தாரா திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. 

hombale films

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் கிரகந்தூர், சமீபகாலமாக பான் இந்தியா திரைப்படங்களை தயாரித்து வருகிறார். நாங்கள் எதிர்பார்த்து வெற்றிப்பெற்ற படம் கேஜிஎப். ஆனால் எதிர்பார்க்காத படம் ‘காந்தார’. இந்த இரண்டு படங்களின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். 

அதனால் வருடத்திற்கு ஒரு படம் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அந்த வகையில் அடுத்த ஆண்டு எங்களது தயாரிப்பாக உருவாகி வரும் ‘சலார்’ வெளியாகவிருக்கிறது. இதையடுத்து தூமம், ரகு தாத்தா, பகீரா ஆகிய படங்கள் வரிசைக்கட்டி நிற்பதாக அவர் தெரிவித்தார். 

Share this story