‘கன்னட மொழியில் மட்டுமே படம் பண்ணுவேன்…..’- காரணம் கூறிய ரிஷப் ஷெட்டி.

photo

காந்தாரா பட புகழ் ரிஷப் ஷெட்டி, கன்னடம் தவிர்த்து பிற மொழி படங்களில் நடிக்கவே மாட்டேன் என திட்ட வட்டமாக கூறியுள்ளார்.

photo

கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிய படம் காந்தாரா. கன்னடத்தில் தயாரான இந்த படம் மக்களிடம் பெற்ற வரவேற்பால் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. சமீபத்தில் கூட அதற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

photo

இந்த நிலையில் கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம் திரையிடப்பட்டது. படம் குறித்து பேசிய ரிஷப் கன்னட மொழி படங்களில் மட்டுமே நடிப்பேன் என் கூறியுள்ளார்.  பிற மொழிகளிலிருந்து வாய்ப்பு வருகிறது. ஏன் நான் ரசிகனாக இருக்கும் நடிகர்களின் படங்களில் நடிக்க கூட வாய்ப்பு வருகிறது. அனால் கன்னட மக்கள் தான் எனக்கு துணையாக இருந்தனர். அதனால் அவர்களுக்கு கடமைப்பட்டவனாக இருப்பேன். எனக்கென சில விதிமுறைகள் உள்ளன. கன்னடத்தில் மட்டுமே படம் செய்வேன். இல்லையென்றால் உலக அளவில் சென்று சேரும்படி படம் செய்வேன். எமோஷன் எல்ல மொழிகளிலும் ஒன்றுதான்” என கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி.

Share this story