பாரடைஸ் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

பாரடைஸ் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் பிரபல இலங்கை இயக்குநர் பிரசன்னா விதானகே இயக்கிய மலையாளத் திரைப்படம் 'பாரடைஸ்'.

2022-ம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஆகியவை இலங்கையில் நாடு தழுவிய போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் திருமண நாளை கொண்டாட அங்குச் செல்லும் கேரள தம்பதி எதிர்கொள்ளும் நிகழ்வுகள்தான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். 

பாரடைஸ் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு, கே இசை அமைத்துள்ளார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் இந்தப் திரைப்படம், தென் கொரியாவின் புசான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு சிறந்த படத்துக்காக வழங்கப்படும் 'கிம் ஜெசோக்' விருதும் இந்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

Share this story