ஐடி ரெய்டு: 'புஷ்பா' படப்பிடிப்பு நிறுத்தம்! - இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடி!
புஷ்பா படத்தின் இயக்குநர் மர்றும் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ‘சகுமார்’. இவர் அல்லு அர்ஜுனின் ‘ஆர்யா’ படத்தின் மூலமாக சினிவிற்குள் காலடி எடுத்துவைத்தார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் பிளாக் பஸ்டர் திரைப்படம் என்றால் அல்லுஅர்ஜுன், ராஷ்மிகா, பகத்பாசில் நடித்து வெளியான ‘புஷ்பா- தி ரைஸ்’.இந்த படத்தை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமான ‘புஷ்பா- தி ரூல்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு படு ஜோராக சென்று கொண்டிருந்த நிலையில், பட இயக்குநர் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனம் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
திடிரென நடத்தப்பட்ட இந்த சோதனையால் புஷ்பா பட சூட்டிங் நிறுத்தப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் இரண்டாவது முறையாக இந்த சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் புஷ்பா படம் தவிர்த்து ஜூனியர் என்.டி.ஆரின் 31வது படம் மற்றும் ராம்சரணின் 16வது படம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. ரெய்டுக்கான காரணமாக, ஹவாலா பணத்தை பட்டுவாடா செய்ததாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.