புதுசு கண்ணா புதுசு….. ‘நாட்டு நாட்டு’ பாடல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்.

photo

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வெளியாகி ஹிட்டானது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் தான் கோல்டன் குளோப்ஸ் விருதை தட்டி சென்றது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமான அந்த பாடலை பயன்படுத்தி ஜெய்பூர் காவல்துறை, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

photo

சில நேரங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறை அந்த சமயத்தில்  டிரெண்டாக உள்ள விஷயத்தை பயன்படுத்துவது வழக்கம். அப்போதுதான் மக்கள் அதனை சுலபமாக கிரகித்துக்கொள்வார்கள், உதாரணமாக மாண்டஸ் புயல் மைய்யம் கொண்டிருந்த சமயத்தில் அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த மாமா குட்டி என்ற வார்த்தையை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் ஒருவர் ‘எந்த மாமா குட்டி கூப்பிட்டாலும்  ECR பக்கம் போகாதிங்க’ என ட்வீட் செய்திருந்தார்.

photo

அதே போல விருது வென்ற பிரபல பாடலான நாட்டு நாட்டு பாடலை வைத்து ‘ SAY NOTO NOTO NOTO NOTO DRINKING WHILE DRIVING’ அதாவது குடித்துவிட்டு வாகனம் ஓட்ட நோ சொல்லுங்கள் என பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு அதிகம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this story