இயக்குநர் ராஜமௌலியை ஹாலிவுட் படமெடுக்க ஊக்கபடுத்திய ஜேம்ஸ் கேமரூன் – வீடியோ வெளியீடு.

photo

இந்திய சினிமாவின் பிரம்மாண்டமாய் திகழும் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் சிறந்த படலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதை தட்டி சென்றது. அந்த விழாவில் ஆர் ஆர் ஆர் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்த பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.

photo

தொடர்ந்து டைட்டானிக், அவதார், அவதார் 2 படங்களை இயக்கிய ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் பாகுபலி, பாகுபலி2, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமௌலியும் சந்தித்து ஒருவரை ஒருவர் பாராட்டி மனம்விட்டு பேசிக்கொண்டனர். அதறகான புகைப்படம் வெளியாகி அதிகம் பகிரப்பட்ட நிலையில் தற்போது உரையாடல் தொடர்பான 3 நிமிடங்கள் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

photo

இயக்குநர் ராஜமெளலியிடம் ஆர்ஆர்ஆர் படத்தை 2 முறை பார்த்ததாக ஜேம்ஸ் கேமரூனின் மனைவியும் இயக்குநருமான சூசி அமீஸ் கேமரூன் சொல்ல மெய் சிலிர்த்து போனார் ராஜமெளலி. மேலும், “நீங்க இப்போ டாப் ஆஃப் தி வேர்ல்ட்ல இருக்கீங்க உங்க நாட்டு மக்களின் சுதந்திரம், உணர்ச்சிகளை படமாக கொடுத்து இருக்கீங்க இங்கே கிடைக்கும் அங்கீகாரம் உங்களுக்கு எக்ஸ்ட்ரா போனஸ் தான்” என படத்தையும் இயக்குநர் ராஜமெளலியின் உழைப்பையும் வெகுவாக பாராட்டினார்கள் ஜேம்ஸ் மற்றும் சூசி. அதுமட்டுமல்லாமல் “ஹாலிவுட்ல படம் பண்ணனும்னா சொல்லுங்க நான் உதவி பண்றேன் என ஜேம்ஸ் கேமரூன் சொல்லியது ராஜமௌலிக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. இந்த ஊக்கம், ரஜமௌலி அடுத்து ஹாலிவுட் படம் எடுப்பாரா எனபதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Share this story