ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்த ஜவான்....வெற்றியை கொண்டாடிய படக்குழு

ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்த ஜவான்....வெற்றியை கொண்டாடிய படக்குழு

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் செய்ததை தொடர்ந்து, படக்குழு வெற்றியை கொண்டாடியுள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்த ஜவான்....வெற்றியை கொண்டாடிய படக்குழு

இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஷாருக்கான், அட்லீ, தீபிகா படுகோன், அனிருத், விஜய் சேதுபதி ஆகியோர் பங்கேற்று படத்தின் வெற்றியை ஆடிப்பாடி கொண்டாடினர். 

ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்த ஜவான்....வெற்றியை கொண்டாடிய படக்குழு

Share this story