‘ஜவான்’ ஓடிடி ரிலீஸ் ? – வெளியான சூப்பர் தகவல்.

photo

அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் தயாரான ‘ஜவான்’ சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் லீக்காகியுள்ளது.

photo

கோலிவுட்டில் சூப்பர் ஹிட் இயக்குனரான அட்லீ, பாலிவுட்டில் கால்பதித்த படம் ‘ஜவான்’. தனது முதல் பாலிவுட் படத்திலேயே வசூல் மன்னன் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே அவரது ரசிகர்கள் குஷியானார்கள். தொடர்ந்து இந்த படத்தில் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு, விஜய்சேதுபதி என ஒரு நட்சத்திர பட்டாலமே நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி ரசிகர்களில் எகோபித்த ஆதரவிற்கு மத்தியில் படம் வெளியானது.

photo

தொடர்ந்து படம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும்,  சிலர் சிலாய்கித்து விமசித்தனர். இருந்து, வசூலில் நின்று பேசியது ‘ஜவான்’. கிட்டதட்ட ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.250 கோடி கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story