நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது ஜவான்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும், ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
Birthday Jawan ka hai par gift sab ke liye 😎We're good to go!
— Netflix India (@NetflixIndia) November 1, 2023
Jawan (the extended cut) is now streaming in Hindi, Tamil and Telugu, only on Netflix 💥 pic.twitter.com/SBNBM9hBFB
இந்நிலையில், ஜவான் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் முழுநீள ஜவான் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது.