மெடிக்கல் க்ரைம் படத்தில் நடிகர் ஜெயராம்.. மிரட்டலான ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ ஃப்ர்ஸ்ட் லுக் !

AbrahamOzler

நடிகர் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயராம். மலையாள நடிகராக அவர், கடந்த 3 ஆண்டுகளாக திரைப்படங்கள் நடிக்காமல் இருந்தார். கடைசியாக கடந்த 2020-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மகள்’ படத்தில் நடித்திருந்தார். அதேபோன்று தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நம்பி கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். 

AbrahamOzler

இதையடுத்து தற்போது மலையாளத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜெயராம் நடித்து வருகிறார். ‘ஆடு’, ‘ஆடு 2’, ‘அஞ்சாம் பதிரா’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி மலையாள இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கி வருகிறார். 

மெடிக்கல் க்ரைம் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் மிரட்டலாக லுக்கில் ஜெயராம் உள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 

 

 

Share this story