ஜெயராம் மகள் மாளவிகா ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

ஜெயராம் மகள் மாளவிகா ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து, ‘புத்தம் புது காலை’ மற்றும் ‘பாவக் கதைகள்’ என்ற இரு அந்தாலஜி படங்களில் ஒரு பகுதியில் நடித்திருந்தார். பாவக்கதைகள் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றது.  இதைத் தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு மகனாக காளிதாஸ் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, காளிதாஸ் ஜெயராம்  வினைல் ஸ்கரியா வர்கீஸ் என்பவர் இயக்கத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு மலையாளத்தில் ‘ரஜ்னி’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெய்ராம் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்திருந்தார். 

ஜெயராம் மகள் மாளவிகா ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

இவருக்கு அண்மையில் நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, அவரது தங்கை மாளவிகா ஜெயராமுக்கும் காதலருடன் திருமண நிச்சயதார்ததம் நடைபெற்றுள்ளது. விரைவில் இருவரது திருமண தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. 
 

Share this story