நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல நடிகை- அதிர்ச்சியில் ரசிகர்கள்.

phone

சமீப காலமாக பிரபலங்கள் மீதான தாக்குதல், தற்கொலை போன்ற நிகழ்வுகள் அதிகரித்து  வருகிறது, அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரை ஒரு கும்பல் நடுரோட்டில் வைத்து சுட்டுகொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

phone

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை ரியா குமாரி. இவரது  கணவர் பிரகாஷ் குமார் படத்தயாரிப்பாளர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் நேற்று குடும்பத்தோடு ஹவுரா நெடுஞ்சாலையில் காரில் கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மகிஷ்ரேகா என்ற இடத்தில் அவர்களது காரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

photo

அவர்களை தடுக்க முயன்ற ரியா குமாரியை கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்திலுருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரியாவை அவரது கணவர் பிரகாஷ் குமார் மீட்டு   மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து கொள்ளை கும்பலை பிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.  ரியாகுமாரியின் மரணசெய்தி அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக உள்ளது.

Share this story