பிரசாந்த் நீலுடன் இணைந்த ஜூனியர் என்.டி.ஆர்.... அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடக்கம்...

பிரசாந்த் நீலுடன் இணைந்த ஜூனியர் என்.டி.ஆர்.... அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடக்கம்...

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலக அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவாவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்

பிரசாந்த் நீலுடன் இணைந்த ஜூனியர் என்.டி.ஆர்.... அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடக்கம்...

இந்நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ‘என்டிஆர்31’ என அழைக்கப்படும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story