"அவருடன் நடிப்பது கனவாக இருந்தது" - ஜான்வி கபூர் பூரிப்பு !

jhanvi kapoor

ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிப்பது கனவாக இருந்ததாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். தற்போது நித்தேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகும் ‘படே மியான் சோட் மியான்’, ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

jhanvi kapoor

தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள அவர், ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  'ஜனதா கேரேஜ்' படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக கொரட்டாலா சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார். நந்தமுரி கல்யாண் ராம் உடன் இணைந்து சுதாகர் மிக்கிலினேனி இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றனர். 

jhanvi kapoor

இந்நிலையில் ஜூனியர் என்டிஆருடன் பணியாற்றுவது குறித்து தனது மகிழ்ச்சியை நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். அதில் ஜூனியர் என்டிஆருடன் நடிப்பது என்பது எனது கனவாக இருந்ததது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிப்பது என்பது என வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷங்களில் ஒன்று என்று கூறினார். 

Share this story