ஜூனியர் என்டிஆருக்கு வில்லனான பாலிவுட் நடிகர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

NTR30

ஜூனியர் என்டிஆருக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் உருவாகிறது. இந்த படத்தை ‘ஜனதா கேரேஜ்’  படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். ஜூனியர் என்டிஆரின் 30வது உருவாகும் இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. 

NTR30

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார். நந்தமுரி கல்யாண் ராம் உடன் இணைந்து சுதாகர் மிக்கிலினேனி இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகிறது.

NTR30

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர் என்டிஆருடன் நடிகர் சையிப் அலிகான் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  

NTR30

Share this story