மிரட்டலான தோற்றத்தில் ஜூனியர் என்டிஆர்.. வைரலாகும் புகைப்படம் !

junior ntr

நடிகர் ஜூனியர் என்டிஆர் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். கடந்தாண்டு ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார்.

junior ntr

கடலோர பின்னணியில் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார்.‌ இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆரின் புதிய தோற்றத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மிரட்டலான லுக்கில் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story