ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் ராஷ்மிகா மந்தனா… எந்த படம்னு‌ தெரியுமா ?

ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் ராஷ்மிகா மந்தனா… எந்த படம்னு‌ தெரியுமா ?

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் புதிய படத்தில் ராஷ்மிகா நடிக்கவிருக்கிறார்.

ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் ராஷ்மிகா மந்தனா… எந்த படம்னு‌ தெரியுமா ?

கன்னடப் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் நெம்பர் ஒன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கு, இந்தி, தமிழ்,கன்னடம் என 4மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் ராஷ்மிகா மந்தனா… எந்த படம்னு‌ தெரியுமா ?

தெலுங்கில் குறுகிய காலகட்டத்தில் மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர், நடிகர் கார்த்திக்கின் ‘சுல்தான்’ படத்திலும் நடித்துள்ளார். பாலிவுட்டிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடிக்கவிருக்கும் ராஷ்மிகா, நடிகர் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் ராஷ்மிகா மந்தனா… எந்த படம்னு‌ தெரியுமா ?

இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தை திரிவிக்ரம் இயக்கவுள்ளார். ஜூனியர் என்டிஆரின் 30-வது படமாக உருவாகும் இந்த படம் வருகிற மே மாதம் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Share this story