தேவராவிற்காக தயாராகும் ஜூனியர் என்டிஆர்... வைரலாகும் ஒர்க்கவுட் வீடியோ !

'தேவரா' படத்திற்காக நடிகர் ஜூனியர் என்டிஆர் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர், தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 'தேவரா' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் தெலுங்கின் முன்னணி இயக்குனரான கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். நந்தமுரி தாரகா ராமாராவ் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றன.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடலோர பின்னணியில் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றி வருகிறார் நடிகர் ஜூனியர் என்டிஆர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.