உபேந்திராவின் ‘கப்ஜா’-வை கைப்பற்றிய லைக்கா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

KABZAA

 கன்னடத்தில் உருவாகியுள்ள ‘கப்ஜா’ படத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கப்ஜா’. கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.

gabzaa

நடிகர் சுதீப் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஜெகபதி பாபு, ராகுல் தேவ், கபீர் துஹான் சிங், டேனிஷ் அக்தர் சைஃபி, அனுப் ரேவன்னா மற்றும் கோட்டா ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி, மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஒரியா ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

கன்னடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை சந்துரு இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மார்ச் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story