கேஜிஎப்பை மிஞ்சிய பிரம்மாண்டம்... 'கப்ஸா' டிரெய்லர் வெளியீடு !

kabzaa

உபேந்திரா நடிப்பில் உருவாகியுள்ள 'கப்ஸா' படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

கன்னடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கப்ஸா. நடிகர் உபேந்திரா நாயகனாக நடித்துள்ள இப்படம் ஒரு பான்-இந்தியா படமாக உருவாகியுள்ளது. நடிகர் சுதீப் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஜெகபதி பாபு, ராகுல் தேவ், கபீர் துஹான் சிங், டேனிஷ் அக்தர் சைஃபி, அனுப் ரேவன்னா மற்றும் கோட்டா ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

kabzaa

கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி, மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஒரியா ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

kabzaa

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. கேஜிஎப் படத்தை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story