5 நாட்களில் ரூ.6 கோடி வசூலித்த காதல் தி கோர்

5 நாட்களில் ரூ.6 கோடி வசூலித்த காதல் தி கோர்

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் தயாரான படம் ‘காதல் தி கோர்’. கடந்த 23ஆம் தேதி வெளியான இந்த படத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் மனைவியாக ஜோதிகா நடித்துள்ளார். அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்கிறார். அதற்காக அவர் கூறும் காரணம் மிரளவைக்கிறது. தொடர்ந்து ஜோதிகாவின் கணவரான மம்மூட்டி என்ன செய்தார். இந்த சிக்கலிலிருந்து வெளி வந்தாரா என்பதே மீதி கதை. இந்த படம் பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். நடிகை சமந்தா” இந்த ஆண்டின் சிறந்த படம் காதல் தி கோர். இந்த படத்தை நீங்கள் பார்த்து உங்களுக்கு நன்மை செய்துகொள்ளுங்கள். மம்மூட்டி சார் நீங்கள் தான் எனது ஹீரோ.  நடிப்பை பார்த்துவிட்டு அதிலிருந்து நீண்ட நேரம் என்னால் வெளிவர முடியவில்லை. லவ் யூ ஜோதிகா, லெஜெண்டரி ஜியோ பேபி” என புகழ்ந்து தள்ளினார்.

5 நாட்களில் ரூ.6 கோடி வசூலித்த காதல் தி கோர்

இந்நிலையில், காதல் தி கோர் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 6 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இருப்பினும், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this story