அடித்து துவம்சம் செய்யும் காஜல் அகர்வால்.. பிறந்தநாளையொட்டி படத்தின் தலைப்பு அறிவிப்பு !

Satyabhama

நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக அறியப்படும் அவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

Satyabhama

 காஜல் அகர்வாலின் 60வது படமாக உருவாகும் இந்த படத்தை அகில் தேகலா என்பவர் இயக்கி வருகிறார். ஷசி கிரண் டிக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீ சரண் பாக்கலா என்பவர் இசையமைத்து வருகிறார். சிங்கம் மோகித் கிருஷ்ணா என்பவர் இசையமைத்து வருகிறார். 

Satyabhama

இந்நிலையில் காஜல் அகர்வால் பிறந்தநாளையொட்டி அவரின் 60வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சத்யபாமா’ என்ற தலைப்பில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story