தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் கங்கனா ரணாவத்

தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் அண்மையில் வெளியாகும் அனைத்து படங்களும் தொடர்ந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இதனால், அவர் கவலை அடைந்துள்ளார்.

தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் கங்கனா ரணாவத்

சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தேஜஸ். 2016 ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்திய விமானப் படை போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தாமதமானது. இத்திரைப்படம் கடந்த 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், திரைப்படம் தோல்வியைச் சந்தித்தது. 

தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் கங்கனா ரணாவத்

இதற்கு முன் கங்கனா நடிப்பில் வெளியான சந்திரமுகி இரண்டாம் பாகம், தாக்கட், தலைவி, பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா, சிம்ரன், ரங்கூன், கட்டி பட்டி, ஐ லவ் நியூயார்க் ஆகிய திரைப்படங்களும் தோல்வியைத் தழுவி இருந்தன. தொடர் தோல்விகளால் நடிகை கங்கனா ரணாவத் கவலை அடைந்துள்ளார். 
 

Share this story