கங்கனா நடித்துள்ள தேஜஸ்.... அக்.,27 ரிலீஸ்

கங்கனா நடித்துள்ள தேஜஸ்.... அக்.,27 ரிலீஸ்

விமானப் படை அதிகாரியாக கங்கனா நடித்திருக்கும் தேஜஸ் திரைப்படம் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வௌியாகிறது. 

கங்கனா நடித்துள்ள தேஜஸ்.... அக்.,27 ரிலீஸ்

சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தேஜஸ். 2016 ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்திய விமானப் படை போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தாமதமானது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் டீசரில் விமானப் படை விமானி உடையில் கங்கனா போர் விமானம் ஒன்றில் புறப்படுவது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. 

Share this story