‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!
1699527216783

மம்மூட்டியின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மமூட்டி தயாரித்து நடித்துள்ள படம் ‘கன்ணூர் ஸ்குவாட்’ இந்த படத்தில் ரோனி டேவிட்ராஜ், அஜீஸ், கிஷோர், சன்னி வெயின் ஆகியோர் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லரில் வெளியான இந்த படத்திற்கு சுஷின் ஷயாம் இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான இந்தப்படம் சுமார் ரூ60 கோடிபட்ஜெட்டில் தயாராகி, ரூ100 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி படம் இன்மாதம் 17ஆம் தேதி டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.