உருவாகிறது ‘காந்தாரா 2’ – வெளியான அட்டகாசமான தகவல்.

photo

கடந்த ஆண்டு இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’ இந்த திரைப்படம் கன்னடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. சுமார் 15 கோடியில் தயாரான் இந்த படம் 400கோடிக்கு மேல் வசூலித்து  சாதனை படைத்தது. இந்த நிலையில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது குறித்த தகவல் கசிந்துள்ளது.

photo

அதாவது ஹோம்பாலே ப்லிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின்  நிறுவனர் விஜய் கிரங்கந்துர் காந்தாரா-2 ஆம் பாகம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்அதன்படி காந்தாரா2 உருவாவது உறுதியென்றும் , கதை முந்தய கதையின் தொடர்ச்சியாக இல்லாமல், முதல் பாகத்தின் முந்தைய பாகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

photo

அதுமட்டுமல்லாமல் இயக்குநரான  ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்திற்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக தன்னுடைய உதவி இயக்குநர்களுடன் கர்நாடகா கடற்கரைப்பகுதிக்கு சென்று, படத்திற்கான ஆராய்ச்சியை செய்து வருவதாகவும். படத்தின் ஒரு பகுதியை எடுக்க மழைக்காலம் தேவைப்படுவதால் படத்தை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும். இந்தப்படத்தை ஒரு பான் இந்தியா படமாக எடுத்து அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிடும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 

Share this story