அசுரத்தனமான வெற்றி.. முதலீடோ ரூ. 16 கோடி.. வசூலோ.. - மகிழ்ச்சியில் காந்தாரா படக்குழு..

kanthara

 ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது காந்தாரா திரைப்படம். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இந்தியாவில் அதிக அளவு பேசப்படும் படமாக இப்படம் அமைந்துள்ளது. எதார்த்தமான நடிப்பில் வெளியான காந்தாரா தனது வலுவான கதையின் மூலம் தற்போது ஃபேன் இந்தியா திரைப்படமாக  விஸ்வரூபம்  எடுத்துள்ளது.
கன்னட படம் என்றாலே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் சூப்பர் ஹிட் கொடுக்கும் திரைப்படங்களை ரீமேக் செய்வது,  இல்லாவிட்டால் சுமாரான படங்களை எடுத்து குவிப்பது  என்பதே பலரதும் பார்வையாக இருந்து வந்தது.  இதையெல்லாம்  2018 ஆம் ஆண்டு  யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை  கொடுத்து ஓரங்கட்டியது.

kanthara

இதனை அடுத்து கன்னட சினிமாவில் கருட கமனா ரிஷப வாகனா, சார்லி  777 போன்ற தரமான படங்கள்  அடுத்தடுத்து வரத் தொடங்கியது.  அந்த வரிசையில் தற்போது காந்தாரா என்ற படம் வெளியாகி  அனைவரும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இப்படத்தின் கதை கர்நாடகாவில் மூளையில் உள்ள ஒரு மலை கிராமம் அந்த கிராமத்தின் மக்களுக்காக மன்னர் ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்குகிறார். அவருக்கு பின்னால் வரும் அவரின் வாரிசுகள் அந்த நிலத்தை மக்களிடமிருந்து பிடுங்க முயற்சிக்கின்றனர் கடைசியில் அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பதே காந்தாராவின் கதையாகும்.

இக்கதையில் பழங்குடியின மக்களின்  வாழ்க்கை முறை, வழிபாடு மற்றும் கம்பளா என்ற எருமை பந்தயம், பூத கோலா என்ற நாட்டுப்புற நடனம் என படம் முழுக்க முழுக்க எதார்த்த நடிப்பில் உருவாகி இருப்பதால் இப்படம் மிக பெரிய அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

kanthara
மேலும்  கர்நாடக மாநிலத்தில் மக்களால் அதிகளவு பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையும் காந்தாரா பெற்றுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள திரை பிரபலங்கள் அனைவரும் இந்த திரைப்படம் குறித்து  இப்படக் குழுவிற்கு பாராட்டுக்களை  தெரிவித்து வருகின்றனர்.  மேலும் இப்படம் நவம்பர் 2-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் மேலும் லட்சக்கணக்கான மக்களை இந்த படம் சென்றடைய உள்ளது.  படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் காந்தாரா பெற்றுள்ள வெற்றி என்பது அசுரத்தனமான வெற்றியாகும். இப்படம் கன்னட திரையுலகினருக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

Share this story