‘காந்தாரா’ படத்தின் புதிய சாதனை, ஓடிடி ரிலீஸ் தேதியும் வெளியீடு.

photo

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள திரைப்படம்  ‘காந்தாரா’. சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் நில அரசியல் அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோண கதைகளத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக சப்தமி கவுடா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடித்துள்ளனர்.

photo

கன்னடத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பின் படம் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் டப் செய்யப்பட்டு நல்ல வசூலை ஈட்டிவருகிறது. இந்த நிலையில் படம் தற்பொழுது உலகம் முழுவதும் ரூ 375 கோடி வசூலை தாண்டியுள்ளது. அதுலும் குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் படம்  ரூ175 கோடியைத் தாண்டியுள்ளதாம்.

photo

திரையரங்கில் வெறிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'காந்தாரா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது அதாவது படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share this story