அந்த படம் ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ?... வேற லெவலில் தென்னிந்திய சினிமா !

kanthara

தென்னிந்தியாவின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று ஆங்கிலும் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய திரைப்படங்கள் தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது. அதிலும் தென்னிந்தி சினிமா படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

kanthara

இதையடுத்து ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் சீன மொழியில் வெளியானது. விரைவில் ஆங்கிலம் மற்றும் கொரிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் விரைவில் டப் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. 

kanthara

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் இந்தியாவின் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. வெறும் 16 கோடிக்கு தயாரான இப்படம் 400 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story