'காந்தாரா' படம் பார்த்த நிர்மலா சீதாராமன்... இயக்குனருக்கு பாராட்டு !

niramala sitharaman

'காந்தாரா' படத்தை பார்த்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

தமிழ், தெலுங்கு படங்களை போல் கன்னட சினிமா படங்களும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் ‘காந்தாரா’. இந்த படத்தில் தமிழகத்தை சேர்ந்த கிஷோர், கதாநாயகியாக சப்தமி கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். 

niramala sitharaman

பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சனையே இந்த படத்தின் கதைக்களம். நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தை இணைந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தற்போது பலமொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

niramala sitharaman

வெறும் 20 கோடிக்கு எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கர்நாடகாவில் உள்ள பிரபல திரையரங்கில் பார்த்தார். இந்த படத்தை பார்த்த பின்பு இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த படம் நமது இந்திய கலாச்சாரத்தை பிரதிப்பலிக்கிறது என்று கூறினார். 

Share this story