தொடங்கியது ‘காந்தாரா 2’... யுகாதியையொட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

kanthara

‘காந்தாரா 2’ படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வ ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான உள்ள நிலப் பிரச்சனையை பேசிய படம் ‘காந்தாரா’. தவறு நடந்தால் எப்படி தெய்வம் தண்டிக்கும் என்பது தத்ரூபமாக காட்டப்பட்டிருந்தது. பழங்குடி மக்களின் வாழ்வியல், தெய்வ வழிபாடு உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்பட்டிருந்தது. 

kanthara

இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். தமிழகத்தை சேர்ந்த கிஷோர், சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

kanthara

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்காக சில ஆராய்ச்சி செய்து வருவதாக இயக்குனர் ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தார். அதோடு முதல் பாகத்தின் முந்தைய கதையை இரண்டாம் பாகமாக உருவாக்கவிருக்கிறோம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுகாதி பண்டிகையையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Share this story