அடுத்த மாதம் தொடங்கும் 'காந்தாரா‌ 2'... புதிய அப்டேட்

kanthara 2

'காந்தாரா 2' படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ரிஷப் ஷெட்டி  இயக்கத்தில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 'காந்தாரா'. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சனையே இந்த படத்தின் கதைக்களம். வெறும் 16 கோடிக்கு எடுக்கப்பட்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் காத்திருந்தனர். 

kanthara 2

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரங்கத்தூர் கடந்த சில மாதங்களுக்கு தெரிவித்திருந்தார். காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக உருவாகவில்லை என்றும், அதற்கு மாறாக வேறு ஜோனரில் உருவாகிறது என்று தகவல் வெளியானது. 

இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story