'காந்தாரா' பாடலுக்கு திடீர் தடை... அதிர்ச்சியில் படக்குழுவினர் !

varaha roopam

 'காந்தாரா' படத்தில் வராஹ ரூபம் பாடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'காந்தாரா'. கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழங்குடியின மக்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக இப்படம் உருவாகி வெளியாகியுள்ளது. இந்தப் படம் இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

varaha roopam

'காந்தாரா' படத்தின் க்ளைமேக்ஸில் 'வராஹ ரூபம்' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. நல்ல வரவேற்பை பெற்ற இப்பாடல் கேரளாவை சேர்ந்த தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற இசைக்குழு சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'நவரசம்' என்ற பாடலுடன் ஒத்துப்போவதாகவும், இரண்டு பாடல்களுக்கும் தவிர்க்க முடியாத பல ஒற்றுமைகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. 

varaha roopam

வராஹ ரூபம் பாடல் நவரசம் பாடலின் காப்பி என்பதால் காந்தாரா படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு தெரிவித்திருந்தது. காப்புரிமை பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வராஹ ரூபம் பாடலுக்கு தடை விதித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோன்று Amazon, Youtube, Spotify, Wynk Music, JioSaavn போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் பயன்படுத்தவும் தடை விதித்தது. 

Share this story