வில்லியாக நடிக்க விருப்பம் - கத்ரினா

வில்லியாக நடிக்க விருப்பம் - கத்ரினா 

பாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்  வருபவர் நடிகை  கத்ரீனா கைஃப். இவர் தமிழ் படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும் நடிகர் விஜய்யுடன் சில வருடங்களுக்கு முன்பு கோகோ கோலா விளம்பரத்தில் நடித்திருந்தார். ஆலியா பட், தீபிகா படுகோன், கிருத்தி சனோன் வரிசையில் முக்கியமான நபர் கத்ரினா கைஃப்.  விஜய் சேதுபதியுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி இருந்தார். இதில் ராதிகா, ராதிகா ஆப்தே, காயத்ரி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியானது. 

வில்லியாக நடிக்க விருப்பம் - கத்ரினா 

இந்நிலையில், பட நிகழ்ச்சியில் பேசிய அவர், வருங்காலத்தில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். வில்லி வேடத்தில் நடிப்பேன் என்றும் தெரிவித்தார். 

Share this story