குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ‘கீர்த்தி சுரேஷ்’– என்ன கீர்த்திமா இதெல்லாம்.

photo

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்துள்ள ‘தசரா’ படத்தின்  வீடியோ பாடல் வெளியீட்டிற்கு மும்பை சென்றிருந்த நிலையில்  வாயில் சரக்கு பாட்டிலை வைத்துக்கொண்டு அதகளப்படுத்தியுள்ளார்.

photo

நானி- கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் ‘தசரா’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இம்மாதம் 30ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா  இயக்கிய இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பட வெளியீட்டிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மும்பையில் தசரா படத்தின் வீடியோ பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் நானி, ராணா மற்றும் கீர்த்தி கலந்து கொண்டுள்ளனர்.

photo

photo

அந்த நிகழ்ச்சியில் மூவரும் இணைந்து, படத்தின் டிரைலரில் நானி கல்பாக சரக்கு அடிப்பதை போல அப்படியே செய்து காட்டியுள்ளனர். ஆனால் இவர்கள் குடித்தது சரக்கு இல்லை குளிர்பானம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் உகாதியை முன்னிட்டு வெளியான, படத்தின் 'தூம் தாம்' பாடலுக்கு நடனமும் ஆடி அசத்தியுள்ளனர். .  

photo

Share this story