‘தசரா’ படப்பிடிப்புதளத்தில் வெண்ணிலாக்கு இவ்ளோ நண்பர்களா! – அறிமுகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்.
தசரா படப்பிடிப்பு தளத்தில் தான் ஏற்று நடித்த வெண்ணிலா கதாப்பாத்திரத்திற்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் பாருங்க என கீர்த்தி ஒவ்வொருத்தராக நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கோதாவரிகானி அருகே உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘தசரா’. பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ள இந்த படத்தில் நானி கதாநாயகநாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். நாளை திரைக்காண உள்ள இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக படு ஜோராக நடந்து வந்த நிலையில், படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‘படப்பிடிப்பு அவ்வளவு சுலபமாக இல்லை, மண், கரும்புகை, சூழ்நிலை இவை கடினத்தன்மையை அதிகரித்தது என சமீபத்திய புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கூட படத்தின் நாயகன் நானி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதில் ஒரு மகிழ்ச்சி ஒளிந்திருப்பதை போல, அந்த படப்பிடிப்பு தளத்தில் தனக்கான நண்பர்களை பெற்றுள்ளார் கீர்த்தி, ஆம்…. வெண்ணிலாவான கீர்த்திக்கு அந்த தளத்தில் இருந்த ஆட்டு குட்டி, சேவல், கன்றுக்குட்டி, கோழிக்குஞ்சு, எருமைமாடு என எல்லா விலங்குகளும் தோஸ்த்தாகியுள்ளது. இது குறித்து அழகான நினைவலைகளை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை அட…..என ஆச்சரியப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.