‘தசரா’ படக்குழுவிற்கு தங்க நாணையங்களை வழங்கிய ‘கீர்த்தி சுரேஷ்’ – அதன் மொத்த மதிப்பு இவ்வளவா!......

photo

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்இவரது நடிப்பில் தற்போது திரைக்குவர தயாராகியுள்ள திரைப்படம்தசரா’. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ள இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா  இயக்கியுள்ளார்.

photo

 சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், டெக்னீஷியன்கள், லைட் மேன்கள் மற்றும் டிரைவர்கள் உள்ளிட்ட சுமார் 130 நபர்களுக்கு தலா 10 கிராம் மதிப்புள்ள தங்கநாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார். இதன் மொத்த மதிப்பு சுமார் 70 லிருந்து 75 லட்சங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தனது அன்பின் அடையாளமாக கீர்த்தி வழங்கிய இந்த பரிசிற்கு கீர்த்தியை  பலரும் பாராட்டி வருகின்றனர்.

photo

 இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ள 'தசரா' படத்தில் கீர்த்தி வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக கீர்த்தி 3 கோடி சம்பளமாக வாங்கிய நிலையில் அதில் ஒரு பகுதியை தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

photo

Share this story